/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குருக்குப்பட்டி ஏரியில் ஆகாயத்தாமரை
/
குருக்குப்பட்டி ஏரியில் ஆகாயத்தாமரை
ADDED : ஜூன் 30, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், பவளத்தானுார் அருகே உள்ள குருக்குப்பட்டி ஏரி, காவிரி உபரி நீர் மூலம், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் நிரம்பி, அடுத்த ஏரியான துட்டம்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இதில் ஒவ்வொரு முறையும் குருக்குப்பட்டி ஏரி நிரம்பும் போது, ஏரி நீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாத வகையில் ஏரி முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் பட்-சத்தில் அருகில் உள்ள ஏரிகள் நிறைந்து விரைவில் குருக்குப்பட்டி ஏரி நிறையும். அதனால் ஏரியில் சூழ்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றி, ஏரி நீரை விவசாயிகள் பயன்படுத்த அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.