sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்

/

நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்

நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்

நாறும் இடைப்பாடி; கவுன்சிலர் ஆதங்கம்


ADDED : ஜன 10, 2025 07:14 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் பாஷா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:

அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி: என் வார்டில் சிறு பாலம் போட, 2 ஆண்டாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை.பாஷா: அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா: என் வார்டில் குப்பை அள்ளப்படவில்லை. அதேபோல் நகராட்சி முழுதும் அள்ளாததால் ஊரே நாறிப்போய் உள்ளது.சுகாதார அலுவலர் முருகன்: குப்பை அகற்றப்பட்டு தான் வருகிறது.அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன்: மின் மயானத்தில் சடலம் எரியூட்ட பகலில், 5,500 ரூபாய், இரவில், 7,500 ரூபாய் வசூலிக்கின்றனர். நகராட்சியால் நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு, ஏன் போர்டு வைக்கவில்லை? பாஷா: சடலம் எரியூட்ட, 3,000 ரூபாய் தான் வசூலிக்க வேண்டும். ஒரு வாரத்தில் போர்டு வைக்கப்படும்.அ.தி.மு.க., முருகன்: தினமும், 5 முதல், 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. 11 டன்னுக்கு ரசீது போடப்படுகிறது. நகராட்சி பணம் கொள்ளை போகிறது.கமிஷனர் கோபிநாத்: வேண்டாதவர்கள் தவறான தகவல் தந்துள்ளார்கள். முறையாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது. முன்னதாக, 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us