/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளை கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
/
வெள்ளை கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம் மாவட்ட புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையில் பறக்கும் படை அலுவலர்கள், இடைப்பாடி தாலுகா பகுதிகளில் நேற்று மதியம் ஆய்வு செய்தனர்.அப்போது இடைப்பாடி - சங்ககிரி சாலையில், அரசு கலைக்கல்லுாரி அருகே, 4 டன் வெள்ளை கற்கள் ஏற்றப்பட்டு வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர்.
உடனே அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வெள்ளை கற்களை கடத்தி வந்தவர் குறித்து, பன்னீர்செல்வம் புகார்படி, கொங்கணாபுரம் போலீசார், கற்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.