/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : ஜன 14, 2025 06:18 AM
ஏற்காடு: ஏற்காட்டில், தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக-ளவில் குவிந்தனர்.நேற்று அதிகாலை முதல் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதி-களில் கடும் பனி மூட்டம் சூழ்ந்தது. இதனால் கடும் குளிர் நில-வியது. 5 அடி துாரத்தில் இருப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்-டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்-டினர். பனி மூட்டம், மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆனால், ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் கடும் குளிரில் ஸ்வெட்டர், குல்லா அணிந்து முக்கிய இடங்களை சுற்றுப்பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லம் சென்ற சுற்றுலா பயணிகள், படகில் சவாரி செய்தவாறு ஏரியை சூழ்ந்த
பனிமூட்டத்தை கண்டு ரசித்-தனர். மேலும் சூழல் சுற்றுலா பூங்காவிற்கு சென்ற அவர்கள், அங்கு சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.