sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இதுவரை ரூ.4.21 கோடி, பொருட்கள் பறிமுதல்

/

இதுவரை ரூ.4.21 கோடி, பொருட்கள் பறிமுதல்

இதுவரை ரூ.4.21 கோடி, பொருட்கள் பறிமுதல்

இதுவரை ரூ.4.21 கோடி, பொருட்கள் பறிமுதல்


ADDED : ஏப் 04, 2024 04:51 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 4 கோடியே, 20 லட்சத்து, 63,742 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், இலியாஸ் என்பவரிடம், 1 லட்சத்து, 88,500 ரூபாயை பறக்கும் படை அதிகாரி செல்வன் தலைமையில் பறிமுதல் செய்தனர். ஈரோடு மேற்கில், சி.என்.கல்லுாரி அருகே ஹரிகிருஷ்ணன் என்பவரிடம், 1 லட்சத்து, 18,200 ரூபாய், மாமரத்துப்பாளையத்தில் வெங்கடேஸ் என்பவரிடம், 480 ரூபாய் மதிப்பில் ஹான்ஸ் பாக்கெட்கள், பெருந்துறை தொகுதி காஞ்சிகோவில் சாலையில், பூபதியிடம், 71,730 ரூபாய், விஜயமங்கலம் சாலையில், முருகேசன் என்பவரிடம், 1 லட்சத்து, 54,700 ரூபாய், பவானி தொகுதி சின்னபாளையம் என்ற இடத்தில் திருப்பதி என்பவரிடம், 74,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட அளவில் இதுவரை ரொக்கப்பணமாக, 3 கோடியே, 17 லட்சத்து, 36,415 ரூபாய், மற்றும் பொருட்களாக, 1 கோடியே, 3 லட்சத்து, 27,327 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர். இதில், ரொக்கப்பணம், 1 கோடியே, 90 லட்சத்து, 95,595 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள, 1 கோடியே, 26 லட்சத்து, 40,920 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us