ADDED : செப் 03, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி, காரிப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, கருமாபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பட்டி சேத்துக்குட்டை பகுதியில் இருந்து மாசிநாயக்கன்பட்டி நோக்கி சென்ற டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, மண் கடத்தி வந்தது தெரிந்தது.
பின் வாகனத்தை ஓட்டி வந்த, மாசிநாயக்கன்பட்டி, காசி நகரை சேர்ந்த லாரி டிரைவர் கோபால், 36, என்பவரை கைது செய்து, 3 யுனிட் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.