/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோலார் மின் இணைப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
சோலார் மின் இணைப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 24, 2025 01:59 AM
சேலம் ;தமிழக மின் பகிர்மான கழகம் சார்பில், மேட்டூர் வட்டம், சங்ககிரி கோட்டத்தில், சோலார் மின் இணைப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த, 20ல் நடந்தது.
அதில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மூலம், வீடுகளில் உள்ள மின் இணைப்பில் மானியத்துடன் கூடிய சூரியசக்தி எனும் சோலார் மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒரு கிலோ வாட்டுக்கு, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு, 60,000 ரூபாய், 3 கிலோ வாட் அல்லது அதற்கு மேல், 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் கடன் வாங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அதேபோல் இடைப்பாடி அரசு கல்லுாரியில், கோட்ட பொறியாளர் தமிழ்மணி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா, சோலார் மின்திட்டங்கள் குறித்து பேசினார். நகராட்சி கமிஷனர் கோபிநாத், அரசு கல்லுாரி முதல்வர் தமிழரசி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.