/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரிய சக்தி மின் வேலி மானிய விலையில் அமைக்கலாம்
/
சூரிய சக்தி மின் வேலி மானிய விலையில் அமைக்கலாம்
ADDED : பிப் 16, 2025 02:59 AM
சேலம்: மானிய விலையில் சூரியசக்தி மின் வேலி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
விலங்குகளிடம் இருந்து விவசாயிகள் பயிர்களை காக்கவும், விலங்குகள் - மனிதர்கள் இடையே மோதலை தவிர்க்கவும், வேளாண் பொறியியல் துறை மூலம், சூரியகாந்தி மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வேலி, உயர் மின்னழுத்தம், குறுகிய கால மின்சார அதிர்ச்-சிகளை கொண்டு செயல்படுவதால், விலங்குகளுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்தாது. 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
பேட்டரி அமைப்புடனும், தொங்கும் சூரிய சக்தி மின்வேலி அமைப்புடனும், 10 ஆண்டு உத்தரவாதம் உடையதாக உள்ளது. குறிப்பாக விலங்குகள் வேலியில் சிக்கினால், மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 2 ெஹக்டேர் பரப்புக்கு, 566 மீ., வரை மானியம் வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிக-ளுக்கு, 50 சதவீத மானியம் உண்டு. இத்திட்டத்தில் சிறு, குறு ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு விவசாயிகளுக்கு முன்னு-ரிமை அளிக்கப்படுகிறது.
வேலிகள் அமைக்கப்படும் வயலின் ஒழுங்கற்ற எல்லைக-ளுக்கும், வளைந்து நெளிந்து அமைக்கும் சூரிய மின்வேலிக்கு தேவைப்படும் கூடுதல் குழாய்களுக்கான செலவை, விவசாயி-களே தங்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக விபரங்களை பெற, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். அதன்படி சேலம், குமார-சாமிப்பட்டி செயற்பொறியாளரை, 04287 -2906266, உதவி செயற்பொறியாளரை, 04287 -2905277 என்ற எண்களில் அழைக்கலாம்.