/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு விற்பனை
ADDED : பிப் 28, 2025 07:00 AM
சேலம் : மாசி அமாவாசையையொட்டி, சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட, மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று, பழம், தேங்காய், வாழை இலை, அகத்தி உள்ளிட்ட கீரை வகைகள், பூசணி, கத்தரி, அவரைக்காய் விற்பனை அமோகமாக நடந்தது.
ஒரு கிலோ தக்காளி, 10 - 16, உருளைக்கிழங்கு, 36 - 50, சின்னவெங்காயம், 40 - 45, பெரிய வெங்காயம், 45 - 50, பச்சை மிளகாய், 30, கத்தரி, 14 - 24, வெண்டைக்காய், 36, முருங்கைக்காய், 100, பீன்ஸ், 60, அவரை, 30, கேரட், 92, கீரை கட்டு, 16 - 20 ரூபாய் என விற்பனையானது. கிலோ வாழைப்பழம், 45 - 90, பப்பாளி, 35 கொய்யா, 50, மாதுளை, 180 -200, சாத்துக்குடி, 80 ரூபாய்க்கு விற்பனையானது. 285 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.06 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக தாதகாப்பட்டியில், 18.33 லட்சம், குறைந்தபட்சமாக மேச்சேரியில், 1.05 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாநகர, மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளிலும், காய்கறி வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.

