/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலக்கெடுவுக்குள் தீர்வு; ஆர்.டி.ஓ., அறிவுரை
/
காலக்கெடுவுக்குள் தீர்வு; ஆர்.டி.ஓ., அறிவுரை
ADDED : நவ 22, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி தாலுகாவில் கடந்த மாதம், 23ல் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களிடம் மனுக்களை பெற்றார். அதன் மீதான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ., லோகநாயகி, அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை பார்வையிட்டு, அரசு அறிவித்தபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண அறிவுறுத்தினார். தாசில்தார் வாசுகி, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள் பங்கேற்றனர்.