/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தை, சித்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்
/
தந்தை, சித்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்
தந்தை, சித்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்
தந்தை, சித்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்
ADDED : ஆக 22, 2025 01:52 AM

இடங்கணசாலை:சேலம் அருகே தந்தை, சித்தியை கொடூரமாக கொலை செய்து, தலை, கை, கால்களை தனித்தனியே துண்டித்து, உடல்களை சாக்கு மூட்டைகளில் கட்டி ஏரியில் வீசிய மகனை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, கோனேரிப்பட்டி, பூசாரிக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 47; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. தம்பதியரின் மகன் ஆகாஷ், 23. பழனிசாமியுடன் கருத்து வேறுபாடால், ஜெயந்தி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நான்காண்டாக ஜெயலட்சுமி, 35, என்பவருடன் பழனிசாமி குடும்பம் நடத்தி வந்தார்.
அவருடன், ஜெயலட்சுமியின் மகள் கனகவல்லி, 18, ஆகாஷ் ஆகியோர், ஒரே வீட்டில் வசித்தனர். கடந்த, 16ம் தேதி இரவு பழனிசாமி, கனகவல்லியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதற்கு ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து, கனகவல்லி, ஆகாஷிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஆகாஷ், அன்றிரவே, பழனிசாமி, ஜெயலட்சுமியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, கத்தியால், இருவரது தலை, கை, கால்களை தனித்தனியே வெட்டி எடுத்துள்ளார்.
உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் கட்டி, ஏகாபுரம் ஏரியில் தலை, கைகளையும், உடலை மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூர் ஏரியிலும் வீசியுள்ளார்.
ஊர் மக்கள் தகவலில், சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், சம்பவ இடத்தில் விசாரித்தார். ஆகாஷ், கனகவல்லியை போலீசார் கைது செய்தனர். உடல் பாகங்களை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

