/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்
/
தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்
ADDED : ஏப் 17, 2024 02:26 AM
வாழப்பாடி:வாழப்பாடி,
செக்கடிப்பட்டி வனத்துறையில் இருந்து நேற்று காலை, 7:45 மணிக்கு
செக்கடிப்பட்டி ஊருக்குள், 4 வயதுடைய ஆண் புள்ளிமான் புகுந்ததாக,
வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. செக்கடிப்பட்டி வனக்காப்பாளர்கள்
ஆனந்த், பெரியசாமி, மானை பிடிக்க சென்றனர். அப்போது ஆனந்தை
தாக்கியதாக, பேளூர் அருகே மணி, 64, அவரது மகன் தீபன், 34, ஆகியோரை,
வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பேளூரில்
புகுந்த மானை வனக்காப்பாளர்கள் ஆனந்த், பெரியசாமி
பிடிக்கச்சென்றனர். அதே பகுதியை சேர்ந்த மணிக்கு சொந்தமான பெட்டி
கடைக்குள் மான் புகுந்தது. மணியை, மான் அருகே செல்லக்கூடாது என
வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் மணிக்கும்,
வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து
வனத்துறையினர், மணியை தள்ளிவிட்டனர். தந்தையை தள்ளிவிட்டதாக,
மணி மகன் தீபனுக்கு தகவல் கிடைத்தது. ஆத்திரமடைந்த தீபன், அங்கு
வந்து ஆனந்தை அறைந்துவிட்டார். காயமடைந்த அவர் வாழப்பாடி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் புகார்படி, மணி,
தீபனை கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

