/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்கலைக்கழக செஸ் போட்டி சோனா கல்லுாரி முதலிடம்
/
பல்கலைக்கழக செஸ் போட்டி சோனா கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 09, 2025 01:44 AM
சேலம், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையே, மண்டல அளவிலான செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் சேலம் சோனா கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
சேலம் பொன்னம்மாபேட்டை இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையேயான, மண்டல அளவிலான ஆண்கள், பெண்கள் செஸ் போட்டி நேற்று நடந்தது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 16 கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை கல்லுாரி இயக்குனர் தென்னரசு துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில், 10 அணிகளும், பெண்கள் பிரிவில், 6 அணிகளும் மோதிய போட்டிகளில் இரண்டு பிரிவுகளிலும், சேலம் சோனா கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தென்னரசு பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை விளையாட்டு இயக்குனர் வடிவேல், பேராசிரியர் தர்மேந்திர குமார் செய்திருந்தனர்.