/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு தேசிய அளவில் 2 விருது வழங்கல்
/
சோனா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு தேசிய அளவில் 2 விருது வழங்கல்
சோனா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு தேசிய அளவில் 2 விருது வழங்கல்
சோனா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு தேசிய அளவில் 2 விருது வழங்கல்
ADDED : நவ 26, 2025 01:50 AM
சேலம், நாட்டின் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும், 'கேப் ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் - 2025' போட்டியின் இறுதி மேடைச்சுற்று, கடந்த, 21ல், புனே, கேப் ஜெமினி வளாகத்தில் நடந்தது. அதில் வெற்றி பெற்ற, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுாரி எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை, 3ம் ஆண்டு மாணவர் விஜய்க்கு விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டன. மேலும் சோனா கல்லுாரிக்கு, சிறந்த பங்கேற்பாளர் விருதை வழங்க, முதல்வர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து சோனா கல்லுாரியில் நடந்த பாராட்டு விழாவில் சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா, முதல்வர் செந்தில்குமார், துறை தலைவி பத்மா ஆகியோர், மாணவர் விஜய்க்கு பரிசு, சான்றிதழ் வழங்கி
கவுரவித்தனர்.
தொடர்ந்து வள்ளியப்பா பேசுகையில், ''ஒரு சாமானிய பெற்றோரின் மகன், இச்சாதனை படைத்து விருது பெற்றது பெருமைக்குரியது. மேலும் சோனா கல்லுாரிக்கு, சிறந்த பங்கேற்பாளர் விருது என, இரு உயரிய விருதுகள் பெற்றது சிறப்பு,''
என்றார்.
செந்தில்குமார் பேசுகையில், ''2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து, விஜய், அவரது தனித்திறனை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளார்,'' என்றார்.

