/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வின் ஸ்டார்' நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் 2ம் நாளாக உண்ணாவிரதம்
/
'வின் ஸ்டார்' நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் 2ம் நாளாக உண்ணாவிரதம்
'வின் ஸ்டார்' நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் 2ம் நாளாக உண்ணாவிரதம்
'வின் ஸ்டார்' நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் 2ம் நாளாக உண்ணாவிரதம்
ADDED : நவ 26, 2025 01:50 AM
சேலம், சேலம், பெரிய புதுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 58. கடந்த, 2016ல், 'வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்; சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ்' என, இரு நிறுவனங்களை அடுத்தடுத்து தொடங்கி, முதலீடு வசூலித்து, 98.54 கோடி ரூபாய் மோசடி செய்தார். இதுதொடர்பாக, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிவக்குமார், 29 மேலாளர்கள் உள்பட, 31 பேர் மீது பதிவு செய்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய சிவக்குமாரின், முன் ஜாமினை, கடந்த, 12ல் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அவர் கைது செய்யப்படவில்லை. இதை கண்டித்து, முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பில், 2ம் நாளாக உண்ணாவிரத போராட்டம், சேலம் கோட்டை மைதானத்தில், செயலர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசுகையில், ''மக்களை சிவக்குமார் ஏமாற்றி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க, நீதிமன்றம் நேரடியாக தலையிட வேண்டும்,'' என்றார். ஏராளமானோர் பங்கேற்றனர்.

