/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சவுந்தரராஜர்
/
வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சவுந்தரராஜர்
வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சவுந்தரராஜர்
வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சவுந்தரராஜர்
ADDED : அக் 13, 2024 08:27 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே சூரியமலை அடிவாரத்தில் வெள்ளூற்று பெருமாள் கோவில் உள்ளது.
அக்கோவிலுக்கு இடைப்பாடியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீதேவி,
பூதேவியுடன் சுவாமி, மேட்டுத்தெ-ருவில் இருந்து பெரிய ஏரிக்கரை வழியே செல்வது வழக்கம்.பெரிய ஏரியில் தண்ணீர் இருக்கும்போது தெப்பத்தேரில் சுவாமி கொண்டு செல்லப்படும். அதன்படி
நடப்பாண்டு தண்ணீர் இருந்-ததால், பெரிய ஏரியில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த தெப்பத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளை ஏற்றி, ஏரியில் கொண்டு சென்றனர்.மறுகரைக்கு சென்றதும், சுவாமிகள் ஊர்வலமாக வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு
எடுத்துச்செல்லப்பட்டன. அங்கு சென்ற பின், அக்கோவிலை சுற்றி வலம் வரச்செய்தனர். பின்
சிறப்பு பூஜை முடிந்து, மாலை மீண்டும் இடைப்பாடிக்கு சுவாமி கொண்-டுவரப்பட்டது.