/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
/
எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
எஸ்.பி., வைத்த டெஸ்டில் 'பெயில்'; 6 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
ADDED : ஜன 24, 2025 04:02 AM

சேலம்: சேலம் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குடியரசு தின பாதுகாப்பு கருதியும், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், சரியாக பணிபுரிகின்றனரா என, எஸ்.பி., கவுதம் கோயல் பரிசோதிக்க முடிவு செய்தார்.
அதற்கு சீருடையில் இல்லாத, 2 போலீசாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில், ஆத்துார் சோதனைச்சாவடி வழியே நேற்று முன்தினம் இரவு அனுப்பினார். அவர்கள் ஆத்துார் ஊரகம், டவுன் பகுதியில் உள்ள வாகன சோதனைச்சாவடியை, போலீசார் கெடுபிடியின்றி கடந்து சென்றனர். இதனால் ஆத்துார் ஊரக ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., லட்சுமி, ஏட்டுகள் வேணுகோபால், மணிகண்டன், ஆத்துார் டவுன் எஸ்.எஸ்.ஐ., அழகேசன், ஏட்டுகள் அருண்குமார், வரதராஜ் ஆகியோரை, மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.