/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு மீது விழுந்த தீப்பொறி ரூ.1 லட்சம் பொருட்சேதம்
/
வீடு மீது விழுந்த தீப்பொறி ரூ.1 லட்சம் பொருட்சேதம்
வீடு மீது விழுந்த தீப்பொறி ரூ.1 லட்சம் பொருட்சேதம்
வீடு மீது விழுந்த தீப்பொறி ரூ.1 லட்சம் பொருட்சேதம்
ADDED : ஜூலை 13, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி கெங்கவல்லி, கடம்பூர் ஊராட்சி க.ராமநாதபுரத்தை சேர்ந்த, விவசாயி அருணாசலம், 50. நேற்று மதியம், 1:30 மணிக்கு, அவரது கூரை வீட்டின் மீது தீப்பொறி விழுந்தது. இதில் வீடு, வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. 1:50க்கு, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவல்படி, 2:10க்கு, அங்கு வந்த வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
ஆனால் மேற்கூரை, பாத்திரம், துணிகள், நில ஆவணங்கள், வைக்கோல் கட்டுகள் என, லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து, கெங்கவல்லி போலீசார்
விசாரிக்கின்றனர்.