ADDED : ஜன 16, 2025 06:55 AM
ஆத்துார்: பொங்கல் பண்டிகையையொட்டி, ஆத்துார், காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று, மூலவர் மாரியம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிேஷகம் செய்யப்பட்டது. மஞ்சள், கரும்பு, பொங்கல் படையல் வைத்து வழிபட்டனர். மூலவர், புஷ்பம், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஆத்துார் முத்துமாரியம்மன், விநாயகபுரம் சமயபுரத்து மாரியம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மாட்டு பொங்கலையொட்டி, ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் மூலவர், நந்தி தேவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. நந்தி தேவருக்கு பழங்கள், காய்கறி வைத்து வழிபட்டனர். ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர், மகாலிங்கேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
குலதெய்வ கோவில்கொளத்துார், மேச்சேரி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குலதெய்வ கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வணங்கி, தங்கள் குலத்தை ஆசிர்வதிக்க வேண்டினர். தொடர்ந்து வீடுகளுக்கு சென்று மாலையில் கால்நடைகளை அழகுபடுத்தி வழிபட்டனர்.

