/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தபால் துறை சார்பில் சிறப்பு விபத்து காப்பீடு
/
தபால் துறை சார்பில் சிறப்பு விபத்து காப்பீடு
ADDED : ஜூன் 17, 2025 01:14 AM
சேலம், சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.350, ரூ.559, ரூ.799 பிரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன், 10 முதல், 30 வரை சிறப்பு விபத்து காப்பீடு பதிவு முகாம் நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்கள், நிறுவனங்கள், பதிவு செய்து பயனடையலாம். 18 வயது முதல், 65 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரர் விபரம் உள்ளிட்டவற்றுடன், சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 0427-2261656 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.