/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமலையில் புரட்டாசி பிரமோற்சவ விழா வரும் 24 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
திருமலையில் புரட்டாசி பிரமோற்சவ விழா வரும் 24 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருமலையில் புரட்டாசி பிரமோற்சவ விழா வரும் 24 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருமலையில் புரட்டாசி பிரமோற்சவ விழா வரும் 24 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : செப் 07, 2025 01:33 AM
சேலம், :திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவ விழா வரும், 24ல் தொடங்கி, அக்., 2 வரை நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, தமிழக அரசு போக்கு
வரத்துக்கழக, சேலம் கோட்டம் சார்பில், தினமும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்து, 13 சிறப்பு பஸ்கள், அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து, 13 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சேலத்தில் இருந்து வரும், 24 காலை, 8:00, 9:00, 10:00 மணி, இரவு, 9:00, 9:30, 10:30 மணி என, திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படும். மறுமார்க்கமான திருப்பதியில் காலை, 6:30, 7:00, 7:30, இரவு, 8:00, 9:00, 10:00 மணிக்கு, சேலத்துக்கு பஸ்கள் புறப்படும்.
அதேபோல் தர்மபுரியில் காலை, 8:00, இரவு, 8:00 மணிக்கும், மறுமார்க்கத்தில் திருப்பதியில் காலை, 6:30, இரவு, 9:00 மணிக்கும் இயக்கப்படும். கிருஷ்ணகிரியில் காலை, 7:00, மாலை, 6:00, இரவு, 8:30 மணிக்கும், மறுமார்க்கத்தில் திருப்பதியில் அதிகாலை, 2:30, மதியம், 1:00, நள்ளிரவு, 12:00 மணிக்கும் இயக்கப்படும். ஓசூரில் மாலை, 6:30, இரவு, 8:00 மணிக்கும், மறு மார்க்கத்தில் திருப்பதியில், காலை, 5:00 மணிக்கும் இயக்கப்படும். குழுவாக செல்லும் பக்தர்
களுக்கும் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 94899 - 00751 என்ற எண்ணில் பேசலாம். திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், பக்தர்கள் நெரிசலை தவிர்த்து பயணிக்க, கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.