/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் உரிமைத்தொகைக்கு 95,923 பேர் விண்ணப்பம்'
/
மகளிர் உரிமைத்தொகைக்கு 95,923 பேர் விண்ணப்பம்'
ADDED : செப் 07, 2025 01:33 AM
சேலம், சேலம் தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை, 15ல் தொடங்கிய முகாம், நவம்பர் வரை நடக்கிறது. நகர் பகுதியில் 168 முகாம், ஊரக பகுதியில் 264 முகாம் நடக்கிறது. கடைகோடி மக்களுக்கும் அருகே சென்று வழங்குவதே முகாமின் நோக்கம். அங்கு பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாளில் தீர்வு காணப்படும்.
இதுவரை பல்வேறு துறைகள் சார்பில், 84,695 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தவிர கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 95,923 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்றைய முகாமில், 4 பேருக்கு குடிநீர் இணைப்புக்கு உத்தரவு, 2 பேருக்கு சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை(இன்று), சன்னியாசிகுண்டு ஊராட்சி, தாரமங்கலம் நகராட்சி, வனவாசி டவுன் பஞ்சாயத்து, கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, சங்ககிரி ஒன்றிய பகுதிகள், சேலம், அன்னதானப்பட்டி பகுதிகளில் முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி உள்பட பலர் உடனிருந்தனர்.