/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று முதல் 9 வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
இன்று முதல் 9 வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 06, 2024 07:18 AM
சேலம்: முகூர்த்த தினம், வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணியரின் வசதிக்காக, இன்று முதல், டிச., 9 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை, மதுரை, பெங்களூரு, திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சியில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூருக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்களிலும், www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.