/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவச்சான்று, தனித்துவ அடையாள அட்டை மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு முகாம் தொடக்கம்

ADDED : அக் 08, 2025 02:05 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று, தனித்துவ அடையாள அட்டை பெற, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த அக்டோபர் முதல், புதன்(இன்று), வெள்ளி ஆகிய நாட்களில், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆத்துார் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், அதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
புதன்தோறும் கை, கால் இயக்க குறைபாடு, தொழுநோயில் இருந்து குணமடைந்தோர், மூளை முடக்குவாத பாதிப்பு, குள்ளத்தன்மை, தசை சிதைவு நோய், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், பார்வையின்மை, குறைந்த பார்வையின்மை, காது கேளாமை, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, ரத்த சோகை, ரத்த அழிவு சோகை, ரத்தம் உறையாமை, ரத்த ஒழுகு குறைபாடு போன்ற மாற்றுத்திறன் பாதிப்புக்கு முகாம் நடக்கிறது.
வெள்ளிதோறும் அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகை குறைபாடு, நடுக்கு வாதம் கொண்ட மாற்றுத்திறனாளிகள், அதற்கான மருத்துவச்சான்று மற்றும் தனித்துவ அடையாள அட்டை பெறலாம்.
முகாமுக்கு வரும் போது, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல்கள், பாஸ்போட் அளவு போட்டோ, 4 ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். தகவலுக்கு கலெக்டர் அலுவலகம், அறை எண்: 11ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலும், 0427 - 2415242 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.