/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் இயந்திர பராமரிப்பு வரும் 15ல் சிறப்பு முகாம்
/
வேளாண் இயந்திர பராமரிப்பு வரும் 15ல் சிறப்பு முகாம்
வேளாண் இயந்திர பராமரிப்பு வரும் 15ல் சிறப்பு முகாம்
வேளாண் இயந்திர பராமரிப்பு வரும் 15ல் சிறப்பு முகாம்
ADDED : மே 11, 2025 03:07 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
உழவு, நடவு, பயிர் பாதுகாப்பு, அறுவடை, பயிர் கழிவு மேலாண் உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளிலும் டிராக்டர்கள், நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள், பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரம், ரோட்டவேட்டர் விதை விதைக்கும் கருவி போன்ற டிராக்டருடன் இயக்கக்கூடிய இணைப்பு கருவிகள், விசை களையெடுக்கும் கருவிகள், விசைத்தெளிப்பான்கள் போன்றவை பெருமளவு பயன்படுவதால், இவை அனைத்தும் அரசு மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இத்தகைய வேளாண் கருவி பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள முகாம் நடத்தப்படுகிறது. இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் பொறியியல் துறை நடத்தும் முகாமில் தனியார் உற்பத்தி பொறியாளர்கள், அலுவலர்கள், உரிமையாளர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புது, நவீன வேளாண் இயந்திரம், முகாமில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படும். சிறு பழுதுபார்ப்பு பணிகளை கையாண்டு இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் வரும், 15ல், ஆத்துார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம் நடக்க உள்ளது.