/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று வெள்ளிகவுண்டனுாரில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம்
/
இன்று வெள்ளிகவுண்டனுாரில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம்
இன்று வெள்ளிகவுண்டனுாரில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம்
இன்று வெள்ளிகவுண்டனுாரில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம்
ADDED : நவ 22, 2024 06:47 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் தேசிய தொல்குடியினர் தினம் வரும், 26 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. மின்சாரம், வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன் - திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு - நுகர்வோர் பாதுகாப்பு, ஆதார், இ - -சேவை மையம், தொழில் மையம், பழங்குடியினர் நலத்துறைகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதன் மூலம், பழங்குடியினர் சமூகத்தை முன்னேற்றும் விதமாகவும், மாணவர்கள், அவர்களது குடும்பங்கள் பயன் பெறும்படியும் நடத்தப்படும்.
அதன்படி வாழப்பாடி வட்டம் வெள்ளிகவுண்டனுாரில் இன்றும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறையில் நாளையும் நடக்கிறது. வரும், 27ல் ஏற்காடு தாசில்தார் அலுவலகம், 28ல் கெங்கவல்லி வட்டம், பச்சமலை, பெரிய பக்களம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.