/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பு எழுத்தறிவு திட்டம்; கைதிகளுக்கு தொடக்கம்
/
சிறப்பு எழுத்தறிவு திட்டம்; கைதிகளுக்கு தொடக்கம்
ADDED : அக் 03, 2024 06:43 AM
ஆத்துார் : காந்தி ஜெயந்தியையொட்டி ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறையில், கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. அதில் சிறை அலுவலர் ஒளிமுத்து பேசுகையில், ''பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புது பாரத எழுத்தறிவு திட்டம், 100 சதவீத எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. எழுத படிக்க தெரியாத கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம், காந்தி ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் எழுத்து பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.ஆத்துார் வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபி, ஆசிரிய பயிற்றுனர்கள் பாலமுருகன், சுப்ரமணியன், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
260 கைதிகள்
அதேபோல் சேலம் மத்திய சிறையில், 260 கைதிகளுக்கு, சிறப்பு எழுத்தறிவு திட்டம் நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தொடங்கிவைத்தார்.இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத்(பொ) கூறுகையில், ''இந்த கல்வி, 6 மாதம் நடத்தி இறுதியில் தேர்வு வைத்து சான்றிதழ் வழங்கப்படும்,'' என்றார். நல அலுவலர் அன்பழகன், துணை சிறை அலுவலர்கள், சிறை பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.