/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈஸ்டரில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை
/
ஈஸ்டரில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை
ADDED : ஏப் 21, 2025 07:19 AM
சேலம்: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் சண்டே திருநாளையொட்டி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில், நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது.
பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமை வகித்தார். அதில் தேவன் உயிர்தெழுந்ததை அறிவித்தார். தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், இயேசு பாடல்களை பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத்தில், பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் திருப்பலி நடந்தது. கலெக்டர் அலுவலகம் எதிரே சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், ஆயர் ஜவஹர் வில்சன் ஆசீர் டேவிட் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. அதில், லிவிங்ஸ்டன் என்பவர், 'இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்' தலைப்பில் தேவ பிரசங்கம் செய்தார்.
கோட்டை சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பிடரீக் தாணு பிள்ளை, 'இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டார்' என அறிவித்து, சிறப்பு ஜெபம் செய்தார்.

