/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் தரிசனம்
/
ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 19, 2025 01:09 AM
சேலம், ஆடி என்றாலே, அம்மனுக்கு உகந்த மாதம். பல்வேறு சிறப்புகள், இந்த மாதத்தில்தான் வருகின்றன. குறிப்பாக ஆடி வெள்ளியில், ஏராளமான பெண்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று அம்மனை வழிபடுகின்றனர். அதன்படி ஆடி முதல் வெள்ளியான நேற்று, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலை முதலே, சிறப்பு அபி ேஷகம் செய்து, மலர்களால் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கம்பத்தில், ஏராளமான பெண்கள், மஞ்சள் கயிறு கட்டி வேண்டுதல் வைத்தனர். குறிப்பாக திருமண தடை நீங்க, நீண்ட ஆயுள் கிடைக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுதல் வைத்தனர். அதேநேரம் பலர், வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும்படி, பக்தர்களுக்கு கூழ், அன்னதானம் வழங்கினர்.
அதேபோல் குமாரசாமிப்பட்டி எல்லைப்
பிடாரி அம்மன் கோவிலில் சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து, முத்துக்களால் ஆன அங்கி அணிவித்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு வேப்பிலைகளால் சேலை வடிவமைத்து அணிவிக்கப்பட்டது. பின் பல்வேறு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன், குகை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன் உள்பட, மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனுக்கு கூழ் ஊற்றினர். தலைவாசல் அருகே, வீரகனுார் பொன்னாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பூஜை நடந்தது.
351 பெண்கள் பூஜை
தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. 351 சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். மூலவர் காசிவிஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு பூஜை நடத்தி, பள்ளி அறை பூஜையுடன் விழா நிறைவுற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தாரமங்கலம் சக்தி மாரியம்மன் நாணய அலங்காரம்; சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரம்; மேச்சேரி பத்ரகாளியம்மன் நாகதேவி அலங்காரம்; இடைப்பாடி, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன், 'கருமாரியம்மன்' அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஆட்டையாம்பட்டி மாரியம்மன், தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் கண்ணனுார் மாரியம்மன்; ஆத்துார் பெரியமாரியம்மன்; உடையார்பாளையம் முத்துமாரியம்மன்; விநாயகபுரம் சமயபுரத்துமாரியம்மன்; ஆறகளூர் அம்பாயிரம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.