/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓணத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
ஓணத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : செப் 13, 2024 07:12 AM
சேலம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை எழும்பூர் - கொச்சுவேலி சிறப்பு ரயில், இன்று மதியம், 3:15க்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் காலை, 8:30க்கு கொச்சுவேலியை அடையும். சேலத்துக்கு இரவு, 8:28க்கு வந்து செல்லும்.அதேபோல் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில், இன்று மதியம், 3:10க்கு கிளம்பி அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே அடுத்தநாள் காலை, 8:30க்கு மங்களூருவை அடையும். சேலத்துக்கு இரவு, 7:47க்கு வந்து செல்லும். அதன் மறுமார்க்க ரயில், வரும், 15 இரவு, 7:45க்கு மங்களூருவில் கிளம்பி மறுநாள் காலை, 11:40க்கு சென்னையை அடையும். சேலத்துக்கு காலை, 6:12க்கு வந்து செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.