/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சபரிமலை பக்தர்களுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்
/
சபரிமலை பக்தர்களுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்
ADDED : ஜன 14, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே நாளை, திருவனந்த-புரம் வடக்கு-விஜயவாடா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவ-னந்தபுரம் வடக்கு-விஜயவாடா சிறப்பு ரயில், நாளை (15) அதி-காலை 1:00 மணிக்கு கிளம்பி,
கொல்லம், கோட்டயம், பாலக்-காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே அடுத்-தநாள் அதிகாலை 5:20 மணிக்கு விஜயவாடா சென்றடையும். ஈரோடுக்கு மதியம், 12:05 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 1:20 மணிக்கும்
வந்து செல்லும். இதில், 2 மூன்றாம் வகுப்பு ஏஸி பெட்டி, 2 ஸ்லீப்பர் பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்-டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

