/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியே நாளை டெல்லிக்கு சிறப்பு ரயில்
/
சேலம் வழியே நாளை டெல்லிக்கு சிறப்பு ரயில்
ADDED : ஏப் 15, 2025 06:30 AM
சேலம்: சேலம் வழியே, எர்ணாகுளம் - டெல்லி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவது: எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில், நாளை (16ம் தேதி) மாலை, 6:05 மணிக்கு கிளம்பி போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணி-குண்டா, விஜயவாடா, போபால், குவாலியர், மதுரா வழியே ஏப்., 18, இரவு, 8:35 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) சென்ற-டையும். ஈரோடு ஜங்ஷனுக்கு ஏப்., 17, அதிகாலை, 12.45 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 1:47 மணிக்கும் வந்து செல்லும். இதில், 20 ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.