/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் விடுமுறையில் ஊட்டிக்கு சிறப்பு ரயில்
/
பொங்கல் விடுமுறையில் ஊட்டிக்கு சிறப்பு ரயில்
ADDED : டிச 31, 2024 07:43 AM
சேலம்: பொங்கல் பண்டிகை விடுமுறையில், ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணியர், மலை ரயிலில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக பயணியர், மலை ரயில் பயணத்துக்கு காத்திருக்கின்றனர். ஊட்டி-குன்னுார் சிறப்பு ரயில் ஜன., 16 முதல், 19 வரை நான்கு நாட்களுக்கு காலை, 8:20 மணிக்கு கிளம்பி, 9:40 மணிக்கு குன்னுார் சென்றடையும்.
குன்னுார்- ஊட்டி சிறப்பு ரயில், ஜன., 16 முதல், 19 வரை, மாலை 4:45 மணிக்கு கிளம்பி, 5:55 மணிக்கு ஊட்டி சென்றடையும். மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில், ஜன., 16 முதல், 18 வரை காலை, 9:10 மணிக்கு கிளம்பி, மதியம் 2:25 மணிக்கு ஊட்டி சென்றடையும். ஊட்டி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், ஜன., 17 முதல், 19 வரை காலை 11:25 மணிக்கு கிளம்பி, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது.