ADDED : டிச 27, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 27-
பெங்களூரு - திருவனந்த
புரம் சிறப்பு ரயில், இன்று மதியம், 3:50 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே, மறுநாள் காலை, 10:05க்கு திருவனந்தபுரத்தை அடையும். சேலத்துக்கு இரவு, 8:32க்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில் நாளை மதியம், 12:35க்கு கிளம்பி, அடுத்தநாள் அதிகாலை, 3:55க்கு பெங்களூருவை அடையும். சேலத்துக்கு இரவு, 11:22க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

