/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவை - தன்பாத் இடையே சிறப்பு வார ரயில் அறிவிப்பு
/
கோவை - தன்பாத் இடையே சிறப்பு வார ரயில் அறிவிப்பு
ADDED : ஏப் 30, 2025 01:18 AM
சேலம்:
கோவை - தன்பாத் சிறப்பு ரயில், மே, 2 முதல், 23 வரை, வெள்ளிதோறும் காலை, 11:50க்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லுார் வழியே ஞாயிறு காலை, 8:30க்கு தன்பாத்தை அடையும்.
வெள்ளி மதியம், 1:35க்கு ஈரோடு, 2:47க்கு சேலம் வந்து செல்லும். அதன் மறுமார்க்க ரயில், மே, 5 முதல், 26 வரை, திங்கள் காலை, 6:00 மணிக்கு கிளம்பி, புதன் அதிகாலை, 3:45க்கு கோவையை அடையும். செவ்வாய் இரவு, 11:40க்கு சேலம், 1:00 மணிக்கு ஈரோடு வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே ௬ல் தாமதமாக செல்லும்
சேலம் - ஜோலார்பேட்டை தடத்தில், காக்கங்கரை - சாமல்பட்டி ஸ்டேஷன்கள் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் மதியம், 2:45க்கு ஜோலார்பேட்டையில் புறப்பட்டு, திருப்பத்துார், சேலம் வழியே ஈரோடு செல்லும் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணியர் ரயில், வரும் மே, 6ல், 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.