ADDED : ஏப் 17, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:பயணியரின்
கூட்ட நெரிசலை குறைக்க, சேலம் வழியே சிறப்பு வார ரயில்
அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாகப்பட்டினம் - கொல்லம்
சிறப்பு வார ரயில், ஏப்., 17(இன்று) முதல் ஜூலை, 3 வரை புதன்தோறும் காலை,
8:20க்கு புறப்பட்டு ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர்,
போத்தனுார் வழியே மறுநாள் மதியம், 12:55க்கு கொல்லத்தை அடையும்.
சேலத்துக்கு நள்ளிரவு, 1:22, ஈரோட்டுக்கு, 2:45க்கு வந்து செல்லும்.
மறுமார்க்க
ரயில், ஏப்., 18 முதல் ஜூலை, 4 வரை வியாழன்தோறும் இரவு, 7:35க்கு
கிளம்பி அடுத்தநாள் இரவு, 11:20க்கு விசாகப்பட்டினத்தை அடையும்.
ஈரோட்டுக்கு அதிகாலை, 5:05க்கும், சேலத்துக்கு, 6:12க்கும் வந்து
செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

