/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
/
சேலம் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
சேலம் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
சேலம் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
ADDED : டிச 31, 2024 07:38 AM
சேலம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சேலம், பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.
இதேபோல, செவ்வாய்பேட்டை பாண்டு ரங்கநாதர் பிரசன்ன வெங்கடாஜலபதி, சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள், லட்சுமி நாராயண சுவாமி, உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், நாமமலை வரதராஜ பெருமாள், உடையாபட்டி சென்றாய பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
* சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள தபால் ஆஞ்சநேயர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* ஆத்துார், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், விநாயகபுரம் ரங்கநாதர் கோவில் பஞ்சமுக ஆஞ்சநேயர், வீரகனுார் வழித்துணை ஆஞ்சநேயர், புத்துார் ஏழு அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.* இடைப்பாடி, மூக்கரை நரசிம்மபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், திருநீறு அபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. பின் தங்ககவசம் சாத்தப்பட்டது.
* மேச்சேரி, கைகாட்டி வெள்ளார், வசந்தம்நகர், ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் நேற்று காலை, 10,008 வடைமாலை, மதியம், தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.மேட்டூர், சேலம்கேம்ப், சீத்தாமலை, 16 அடி உயர ஜீவ ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்திலும், கொளத்துார், அச்சங்காடு, வீர ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
* சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபக்த அனுமனுக்கு, 1,008 வடை, 1,008 வெற்றிலை மாலை அணிவித்து, வெள்ளி கவசம் சார்த்தி சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதே போல் உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவில் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், டிராவல்ஸ், கார், ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சார்பில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு, வடமாலை, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.* நங்கவள்ளி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள, பக்த ஆஞ்சநேயருக்கு நேற்று அதிகாலை, 21 கிலோ எடை கொண்ட வெண்ணைகாப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.