/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மாநில சீனியர் தடகள போட்டியில் சாம்பியன்
/
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மாநில சீனியர் தடகள போட்டியில் சாம்பியன்
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மாநில சீனியர் தடகள போட்டியில் சாம்பியன்
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மாநில சீனியர் தடகள போட்டியில் சாம்பியன்
ADDED : ஜூலை 21, 2025 04:20 AM
ஓமலுார்: மாநில சீனியர் தடகள போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு தடகள சங்கம், சேலம் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, 97வது, 'தமிழ்நாடு மாநில சீனியர் தடகள சாம்பி-யன்ஷிப் - 2025' போட்டியை, சேலம் பெரியார் பல்கலையில் நேற்று முன்தினம் நடத்தின. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். 1,300 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். 100, 200, 400 மீ., ஓட்டப்போட்டிகள், தடை தாண்டும் ஓட்ட போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. இரண்டாம் நாளாக நேற்றும் போட்டிகள் தொடர்ந்தன.அதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, 158 புள்ளிகளை பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்-டத்தை கைப்பற்றியது. அடுத்தடுத்த இடங்களை, சி.வி.பி., ஸ்போர்ட்ஸ் அகாடமி; தமிழ்நாடு போலீஸ் அணி; தென்னக ரயில்வே அணிகள் பிடித்தன.
மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்ற அணி க-ளுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினார். தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் தேவாரம், பொதுச்செயலர் லதா, சேலம் மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன், செயலர் முத்துக்குமாரன் உள்பட பலர் பங்-கேற்றனர்.---------------------