/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
/
ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 03, 2025 01:02 AM
சேலம், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினராக, மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன், சிறப்பு விருந்தினராக, கோவை ஜெம் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் விஜய் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக ஹோலிகிராஸ் அருட்சகோதரர்கள் சபையின் புனித ஆண்ட்ரே புராவின்ஸின் தலைவர் சந்தோஷ் பங்கேற்றார்.
பள்ளி தாளாளர் சேசுராஜ் தலைமையேற்று நடத்தினார். பள்ளி நிர்வாகி யேசுதாசன், ஹோலிகிராஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஸ்டீபன், ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் அந்துவான் குணசீலன் பங்கேற்றனர். முன்னதாக அம்மாபேட்டை காமராஜர் வளைவில், பள்ளி மேனாள் மாணவர் மன்ற தலைவர் வசந்த்குமார், ஒலிம்பிக் சுடர் ஏற்றினார். அச்சுடரை தேசிய, ஆசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற, பள்ளி மாணவர்கள் ஏந்தி வர, பள்ளி வளாகத்தில் மேனாள் மாணவர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், பள்ளியின் விளையாட்டு இணை செயலர் மாணவர் ப்ரீத்விராஜால், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
மாணவ தலைவர் சயத் முகமது தாஹா வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சி, கலைநிகழ்ச்சி, பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டி, தொடர் ஓட்டம், சீர் உடற்பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், பிற ஆசிரியர்கள், விழா குழுவினர், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.