/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று ஆடிப்பெருக்கால் களைகட்டியது ஆட்டுச்சந்தை
/
இன்று ஆடிப்பெருக்கால் களைகட்டியது ஆட்டுச்சந்தை
ADDED : ஆக 03, 2025 01:01 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர்.
குறிப்பாக இன்று ஆடிப்பெருக்கு என்பதால், தலச்சேரி, போயர், சேலம் கறுப்பு, வெள்ளாடு, குறும்பை ஆடு, செம்மறி ஆடுகளை அதிகம் கொண்டு வந்தனர். அதற்கேற்ப உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், போட்டி போட்டு வாங்கினர். ஆடுகள் குறைந்தபட்சம், 8,000 முதல், 30,000 ரூபாய் வரை விலைபோனது. ஆடு, மாடுகள் மூலம், 1.50 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம்
நடந்தது.
அதேபோல் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு, 3,175 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு, 9,250 முதல், 9,800 ரூபாய்; செம்மறியாடு, 8,600 முதல், 8,700 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.60 கோடி ரூபாய்க்கு
விற்பனையானது.