/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்
/
சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்
ADDED : அக் 01, 2024 01:44 AM
சீனிவாச பெருமாள்
திருக்கல்யாண வைபவம்
பாலக்கோடு, அக். 1-
பாலக்கோடு அருகே, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு, 5ம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதில், ஏராளனமான பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து, சீனிவாச பெருமாளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.