/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவன ஆண்டு விழா கொண்டாட்டம்
/
எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவன ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 10, 2025 07:31 AM
மேட்டூர் : மேட்டூர், குட்டப்பட்டி எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவனத்தின், 14ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் செல்வம் வரவேற்றார். நிறுவன தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஆசிரியர் ராமசாமி பங்கேற்றார். செயலர், பொருளாளர் தனசேகர், வேலுசாமி, முன்னாள் தலைவர்கள் கூத்தப்பன், ரங்கநாதன், துணைத்தலைவர் வாசு, துணை செயலர் ராஜமுத்து, துணை பொருளாளர் சுகுமார், கல்வி குழும இயக்குனர்கள் வெங்கடாசலம், ராதாகிருஷ்ணன், மலர்விழி சின்னாகவுண்டர், மணிமேகலை ரங்கநாதன், சண்முகம், பெருமாள், ஜெயகுமார், சுரேஷ் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். இயக்குனர்களின் மனைவியர், குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து பள்ளியில் படித்து மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தோர், விளையாட்டில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

