/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் டவுன் பஞ்., தலைவர் துவக்கிவைப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் டவுன் பஞ்., தலைவர் துவக்கிவைப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் டவுன் பஞ்., தலைவர் துவக்கிவைப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் டவுன் பஞ்., தலைவர் துவக்கிவைப்பு
ADDED : ஜூலை 16, 2025 02:04 AM
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்
குறிச்சி எம்.பி., மலையரசன், சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் பங்கேற்றனர்.
வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் காலசாமி வரவேற்றனர். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி முகாம் தொடங்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய் உள்பட, 13 துறைகள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதேபோல் பல்வேறு கோரிக்கைகளை மக்கள், மனுக்களாக வழங்கினர். டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வ
சூர்யா, அவரது கணவர் சேதுபதி, கவுன்சிலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.