/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்
ADDED : ஜூலை 14, 2025 04:04 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நாளை காலை, 9:00 முதல், மதியம், 3:00 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், சூரமங்கலம், 1வது வார்டுக்கு, ஜாகீர்ரெட்டிப்பட்டி பி.சி.சி., திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.
இடைப்பாடி நகராட்சி, 1, 2, 3வது வார்டுகளுக்கு, ஜே.கே.பி., சாலை நாச்சிப்பாளையம் காளியம்மன் கோவில் திருமண மண்-டபம்; அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து, 1, 10 முதல், 15 வரையான வார்டுகளுக்கு, ஆத்துார் பிரதான சாலை, வாசு மஹால்; சேலம் ஒன்றியம் எருமாபாளையம் ஊராட்சி மக்க-ளுக்கு, வள்ளுவர் நகர் முத்தாயம்மாள் திருமண மண்டபம்; இனாம் வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஊராட்சிகளுக்கு திரு-மலைகிரி செம்மண்திட்டு கிருஷ்ணமூர்த்தி மஹால்; வீரபாண்டி ஒன்றியத்தில் சென்னகிரி, ராஜபாளையம் ஊராட்சிகளுக்கு சென்-னகிரி ருக்மணி அம்மாள் திருமண மண்டபத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று, முகாம் நடக்க உள்ள இடங்-களில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினார்.