/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்
/
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்
ADDED : செப் 06, 2025 02:10 AM
சேலம் ;சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:
தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில், தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரியம், தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியம் உள்பட, 20 நல வாரியங்கள் செயல்படுகின்றன.
சனிதோறும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள், பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், செப்., 6ல்(இன்று), மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில் பதிவு பெற்ற, பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறலாம். முகாமுக்கு வரும்போது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல், ஆதார், பதிவு நலவாரிய அடையாள அட்டைகள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற விபரம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.
பதிவு பெறாத தொழிலாளர்கள் எனில், கூடுதலாக ரேஷன் கார்டு, பணிச்சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.