ADDED : டிச 29, 2024 12:47 AM
சேலம், டிச. 29-
சேலம், அழகாபுரத்தில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில், மாநில கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து, 581 கைத்தறி நெசவாளர்களுக்கு, 1.43 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
வரும், 2025 ஜன., 11 வரை நடக்கும் கண்காட்சியில் சேலைகள், வேட்டிகள், பெட்ஷீட், மெத்தை விரிப்புகள், துண்டு, தலையணை உறைகள், பருத்தி லுங்கிகள் உள்ளிட்ட ஏராளமான ரகங்கள், வகைகள் என, பல்வேறு மாநிலங்களில் இருந்து, 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கைத்தறி ஜவுளிகளுக்கு தமிழக அரசின், 30 சதவீத தள்ளுபடி உண்டு.
கலெக்டர் பிருந்தாதேவி, கதர் துறை அரசு செயலர் அமுதவள்ளி, இயக்குனர் சண்முக சுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.

