ADDED : ஆக 12, 2024 06:29 AM
இடைப்பாடி: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, அண்ணா நகரை சேர்ந்தவர் மோகித்குமார், 19.
கொத்தனாரான இவர் கடந்த, 8 மாலை, 4:00 மணிக்கு, 'பல்சர்' பைக்கில், விக்ரம், 17, என்பவருடன் சென்றார்.வெள்ளாண்டிவலசு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, தண்டபாணி, 42, என்பவர் ஸ்கூட்டியுடன் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது மோகித்குமார் ஓட்டி வந்த வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகித்குமார், இடைப்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் தண்டபாணி, விக்ரமும் காயம் அடைந்து இடைப்பாடியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் மோகித்குமார் நேற்று முன்தினம் காலை இறந்தார். அவரது பெற்றோர் சம்மதப்படி, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை க.புதுாரில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் மோகித்குமார் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இடைப்பாடி தாசில்தார் ராஜமாணிக்கம், நகராட்சி தலைவர் பாஷா உள்ளிட்டோர் மாலை வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.