/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோகுலம் செவிலியர் கல்லூரியில் மாநில அளவில் பயிலரங்கம்
/
கோகுலம் செவிலியர் கல்லூரியில் மாநில அளவில் பயிலரங்கம்
கோகுலம் செவிலியர் கல்லூரியில் மாநில அளவில் பயிலரங்கம்
கோகுலம் செவிலியர் கல்லூரியில் மாநில அளவில் பயிலரங்கம்
ADDED : மார் 17, 2024 02:10 PM
சேலம்: சேலம், நெய்க்காரப்பட்டியில் உள்ள ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவில் ஒருநாள் பயிலரங்கம், 'அடிப்படையில் மற்றும் மேம்பட்ட உயிர்காக்கும் முதலுதவி - வாழ்விற்கும் இறப்பிற்கும் இடையே ஒரு பாலம்' தலைப்பில் நடந்தது. அதில் அவசர, தீவிர சிகிச்சை பிரிவை சேர்ந்த பல்வேறு வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.
இதய செயல் இழப்பின் கண்ணோட்டம், அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி, மேம்பட்ட உயிர்காக்கும் முதலுதவி நெறிமுறை, மருந்துகள், சாதனங்கள், விரைவாக செயல்படும் குழுவின் பங்கேற்பு ஆகிய தலைப்புகளில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் செயல் திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதன் நிறைவு விழாவில் கல்லுாரி மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, சேலம் ஸ்ரீகோகுலம் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயதேவ் பேசினார். கல்லுாரி முதல்வர் தமிழரசி, துணை முதல்வர் காமினி சார்லஸ், பேராசிரியை கனகதுர்கா, செவிலியர்கள், செவிலிய துறை சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

