/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
.குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்
/
.குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்
ADDED : ஏப் 19, 2025 02:06 AM
சேலம்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியையொட்டி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில், சிலுவை பாதை ஊர்வலம் நேற்று காலை, 6:30 மணிக்கு நடந்தது. பேராலய பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமை வகித்தார்.
அரிசிப்பாளையம் துாய மரியன்னை பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் இயேசு வேடமணிந்த ஒருவரின் தலையில், முள் கிரீடம் அணிவித்து, தோளில் சிலுவையை சுமந்துகொண்டு, கல்வாரி மலையை நோக்கி பயணம் செய்ததையும், அப்போது சாட்டையால் அடித்து துன்புறுத்தியதையும், தத்ரூபமாக நடித்து காட்டியபடி ஊர்வலம் சென்றது. வழியில் ஆங்காங்கே சிலுவையில் அறையப்படும் முன் நடந்த நிகழ்ச்சிகளை நடித்துக்காட்டினர். குழந்தை இயேசு பேராலயத்தில், ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு காலை 11:00 மணி முதல், 3 மணி நேரம் தியானம், சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன.
அதேபோல் கலெக்டர் அலுவலகம் எதிரே சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., இமானுவேல், செவ்வாய்ப்பேட்டை ஜெயராகினி, அழகாபுரம் புனித மிக்கேல் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில், சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. நாளை, இயேசு உயிர்த்
தெழுந்த, 'ஈஸ்டர்' பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடக்க உள்ளன.
ஆத்துார், ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில், பங்கு தந்தை அருளப்பன் தலைமையில் நடந்தது. அதில் இயேசு சிலுவை அணிந்து செல்வது, இயேசு சிலுவை சுமந்து,
சாட்டையால் அடித்து சித்ரவதை செய்யும்போது ரத்தம் சொட்ட சொட்ட சிலுவையை சுமந்து செல்வதை செய்து காட்டினர். ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியே சென்றபோது,கிறிஸ்வ மக்கள் வழிபட்டனர். உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை ஊர்வலம் சென்றது.
ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டி புனிய ராயப்பர், சின்னப்பர் திருத்தலத்தில் பங்கு தந்தை ஜோசப் பால்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து சிலுவை சுமந்து செல்லுதல் நடந்தது. நாரணம்பாளையம் அன்னை ஜெயராக்கினி ஆலயத்தில் பங்கு தந்தை அருள்சுந்தர் தலைமையில் சிலுவை சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.