/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புள்ளியியல் துறை விழிப்புணர்வு கண்காட்சி
/
புள்ளியியல் துறை விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : ஏப் 30, 2025 01:23 AM
சேலம்:
தேசிய புள்ளியியல் துறை, அமலாக்க துறையின், 75ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சேலம் துணை மண்டல அலுவலகம் சார்பில், அதன் அலுவலகத்தில், புள்ளியியல் துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது. சேலம் மண்டல அலுவலக முதுநிலை புள்ளியியல் அலுவலர் ராஜகோபால் திறந்து
வைத்தார்.
துறை செயல்பாடுகள் குறித்து, வேளாண், தொழில் துறை, சமூக பொருளாதாரம், ஆய்வுகள், நுகர்வோர் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாதிரிகள் வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட புள்ளியியல் துறையை சேர்ந்த, கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு, புள்ளியியல் துறையில் மத்திய, மாநில அரசுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

